Ads (728x90)

மாவீரர் தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் உணர்வு பூர்வமாக இடம்பெற்றுவரும் நிலையில், கிழக்கு பல்கலை வாளாகத்திலும் இன்று காலை அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வுகளை கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் குழு ஏற்பாடு செய்திருந்ததாக தொிவிக்கப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வுகளின்போது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை பிரதிபலிக்கும் புலி சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டகள் கிழக்கு பல்கலை வாளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறாயினும் கிழக்கு மாகாணத்தில் தரவை, வாகரை, மாவடி மும்மாரி ஆகிய மாவீரர் துயிலும் இல்லங்களில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகின்றன.

Post a Comment

Recent News

Recent Posts Widget