146 இலங்கையர்கள் சுவிசில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக சிங்கள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. 146 இலங்கையர்களும் இந்த ஆண்டு சுவிற்சர்லாந்துக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.எவ்வித உயிர் அச்சுறுத்தல்களும் இல்லாத நிலையில் சுவிற்சர்லாந்தில் அரசியல் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாகவும், குறித்த இலங்கையர்கள் போலி உயிர் அச்சுத்தல்களைக் காட்டி அரசியல் பாதுகாப்பு கோரியுள்ளதாகவும் சிங்கள ஊடகம் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment