Ads (728x90)

வடக்கு மாகா­ணத்­தில் பரா­ம­ரிப்பின்றியுள்ள மக்­க­ளின் காணி­களை அர­சு­ட­மை­யாக்க வேண்­டும். இப்­ப­டிக் கூறு­கின்­றார் வடக்கு மாகாண சபை­யின் மக­ளிர் விவ­கார அமைச்­சர் அனந்தி சசி­த­ரன்.

வடக்கு மாகாண சபை­யின் அடுத்­தாண்டு க்கான வரவு –செல­வுத்­திட்­டத்­தில் சுகா­தார அமைச்சு மீதான விவா­தம் நேற்­றைய தினம் மாகாண சபை­யில் இடம்­பெற்­றது. இந்த அமர்­வி­லேயே அவர் இதனை தெரி­வித்­தார்.
அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது:

வடக்கு மாகா­ணத்­தில், மக்­க­ளின் காணி­கள் பல கவ­னிப்­பா­ரற்று எந்­த­வித பரா­ம­ரிப்­பும் இல்­லா­மல் காணப்­ப­டு­கின்­றன. அவ்­வா­றான காணி­க­ளில்­தான் டெங்கு, மலே­ரியா நுளம்­பு­க­ளின் பெருக்­கம் காணப்­ப­டு­கின்­றது. எனவே அவற்றை பிர­தேச சபை­கள் கைய­கப்­ப­டுத்தி துப்பு­ரவு செய்ய வேண்­டும்.

மக்­கள் காணி­க­ளுக்கு உரிமை கோரி வந்­தால் பிர­தேச சபை­கள் தாம் செல­வ­ழித்த பணத்தை அற­விட வேண்­டும். இவ்­வா­றான நட­வ­டிக்­கை­கள் ஊடாக டெங்கு நுளம்­பு­களை ஓர­ளவு கட்­டுப்­ப­டுத்த முடி­யும். அத்­து­டன் வடக்கு மாகா­ணத்­தில் டெங்­குக் கட்­டுப்­பாட்­டுக்கு இரா­ணு­வத்­தி­னர், கடற்­ப­டை­யி­னர் ஆகி­யோரை பயன்­ப­டுத்து வதை உட­ன­டி­யாக தடுத்து நிறுத்த வேண்­டும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget