Ads (728x90)

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கின் தீர்ப்பு வருகிற டிசம்பர் 21ம் தேதி அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்று கூறப்படும் 2ஜி வழக்கில் அரசுக்கு ஒரு லட்சத்து 76ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கடந்த 2010ஆம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது.. இந்த வழக்கின் விசாரணை கடந்த 7ஆண்டுகள் நடைபெற்று தற்போது தீர்ப்பை நெருங்கியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்பட பலர் குற்றம்சாட்டப்பட்டுள்ள் 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி நவம்பர் 7ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தீர்ப்பு தேதி திடீரென டிசம்பர் மாதம் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு தயாராகததால் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி ஒ.பி. சைனி கூறியிருந்தார்.

இந்நிலையில், தீர்ப்பு அறிவிப்பிற்கான பணிகள் நிறைவடைந்து விட்டதால் வருகிற டிசம்பர் 21ம் தேதி காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிபதி சைனி தற்போது தெரிவித்துள்ளார்.

இதுவரை 6 முறை ஒத்திவைக்கப்பட்ட 2ஜி வழக்கின் தீர்ப்பு, ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெறும் டிச.21ம் தேதி அறிவிக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget