யாழ் - ஏழாலை திவ்யா முன்பள்ளியின் வருடாந்த கலை விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மாணவர்களில் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்பிப்பதே அதிகம் சிரமமான விடயம். ஆனாலும் எங்களுடைய ஆசிரியர்கள் மிகக் குறைந்த வேதனத்தைப் பெற்றுக் கொண்டு பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சேவை மனப் பாண்மையோடு முன்பள்ளி சிறார்களுக்கு கற்பித்து வருவதானது போற்றுதலுக்குரியதாகும்.
உண்மையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வடக்கு மாகாண சபையால் வழங்கப்படுகின்ற வேதனம் என்பது மிக சொற்பமானதே.
அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான பொருளாதாரமாக அவை நிச்சயம் இருக்கமாட்டாது என்பதை நாம் அறிவோம்.
இருப்பினும் மாகாண சபையினால் பாரியளவில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வேதனத்தை உயர்த்த முடியாத நிதி நெருக்கடியில் தற்போது வடக்கு மாகாணசபை உள்ளது.
உங்களுக்கான வேதனத்தை அதிகரிப்பதற்கு மத்திய அரசு மாகாணத்திற்கு பணத்தினை ஒதுக்குவதில்லை.
இருப்பினும் உங்களது உயரிய சேவையை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு (2018) தொடக்கம் 2000 ரூபா வேதன அதிகரிப்பை மேற்கொள்ள உள்ளோம்.
இதற்காக வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது, என்றார்.
Post a Comment