Ads (728x90)

போரால் பாதிக்­கப்­பட்டு மீண்­டு­வ­ரத் துடிக்­கும் எமது வடக்கு மீன­வர்­களை, இந்­திய மீன­வர்­கள் வதைக்­கின்­றார்­கள். இழு­வை­ம­டி­யால் அவர்­கள் வடக்­குக் கட­லில் செய்­யும் அட்­ட­கா­சம் கொஞ்ச நஞ்­ச­மல்ல. இது தெரிந்­தும் கொழும்பு அரசு ஏன் மௌன­மாக இருக்­கின்­றது. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் யாழ்ப்­பா­ணம் – கிளி­நொச்சி மாவட்­டங்­க­ளின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் கேள்வி எழுப்­பி­னார்.
மீன்­பிடி அமைச்சு மீதான குழு­நிலை விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இந்­திய மீன­வர்­கள் நவீன பட­கு­க­ளில், இழுவை மடி­க­ளைப் பயன்­ப­டுத்தித் தொழில் செய்­கின்­ற­னர். இழு­வை­ம­டி­யி­னால் ஏற்­ப­டும் பாதிப்­புக் குறித்து இங்கே எல்­லோ­ருக்­கும் தெரி­யும். இந்­தி­யக் கட­லோ­ரத்­தில் இழு­வை­மடியைப் பயன்­ப­டுத்தி மேற்­கொள்­ளப்­பட்ட மீன்­பி­டி­யால் ஒட்­டு­மொத்தக் கடல் வள­மும் அழிக்­கப்­பட்டு அங்கு மீன்­களே இல்­லாத நிலமை தோன்­றி­யுள்­ளது. மீன்­கள் அதி­கம் உள்ள எமது கடற் ப­ரப்பை நோக்கி அவர்­கள் படை­யெ­டுக்­கின்­றார்­கள்.

வடக்­குக் கட­லில் குறிப்­பாக யாழ்ப்­பாண மீன­வர்­களே இந்­திய மீன­வர்­க­ளின் இழு­வை­ம­டிப் பட­கு­க­ளி­னால் அதி­கம் பாதிக்­கப்­ப­டு­கின்­றார்­கள். தமது வளங்­களை அழித்து விட்டு எமது மீன்­க­ளைச் சூறை­யா­டிச் செல்­வது மாத்­தி­ர­மல்­லா­மல் எமது வளங்­க­ளை­யும் அழிக்­கப் பார்க்கின்­றார்­கள். இந்­திய மீன­வர்­கள் ஒரு கிலோ மீனைப் பிடிப்­ப­தற்­காக, 18 கிலோ உற்­பத்­தி­யா­கக் கூடிய மீன்­குஞ்­சு­களை அழிக்­கின்­றார்­கள்.

இந்­திய மீன­வர்­கள் எங்­கள் கட­லி­லிருந்து ஆண்டு ஒன்­றொன்­றுக்கு 500 பில்­லி­யன் ரூபா பெறு­ம­தி­யான வளங்­களை அள்­ளிச் செல்­கின்­றார்­கள். இந்­தியா ஏற்­று­மதி செய்­யும் மீன்­க­ளில் 40 சத­வீ­தம் எமது வடக்குக் கட­லில் பிடிக்­கப்­பட்­ட­வை­தான். இந்­தத் தக­வல்­கள் உங்­க­ளுக்கு ஆச்­ச­ரி­ய­மாக இருக்­கக் கூடும். ஆனால் இது­தான் உண்மை.

இந்­திய மீன­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு அரசு தயங்­கி­யது. வட­ப­குதி மீன­வர்­க­ளின் தொடர் போராட்­டத்­தின் கார­ண­மாக அவர்­க­ளது பட­கு­கள் கைது செய்­யப்­பட்டுத் தடுத்து வைக்­கப்­ப­டு­கின்­றன. இத­னால் ஆரம்­பத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் 5 சத­வீ­தம் இந்­திய மீன­வர்­க­ளின் வருகை எமது கடற்­ப­ரப்­புக்­குள் குறைந்­துள்­ளது.

போர் முடிந்­த­தன் பின்­ன­ரும் பாது­காப்­புக்கு அதிக நிதி ஒதுக்­கப்­ப­டு­கின்­றது. பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சர் பாது­காப்பு அமைச்சு மீதான நிதி ஒதுக்­கீட்டுக் குழு­நிலை விவா­தத்­தில் உரை­யாற்­றும்­போ­து­கூட, கடற் ப­டைக்கு அதி­ந­வீன கப்­பல்­கள் கொள்­வ­னவு செய்­யப்­ப­ட­வுள்­ள­தா­க­வும் கூறி­னார்.
ஆனால் ஏன் இந்­திய மீன­வர்­க­ளின் அத்­து­மீ­றிய வரு­கையைக் கடற்­ப­டை­யால் தடுக்க முடி­யா­மல் இருக்­கின்­றது. ஏன் கண்­டு­கா­ணா­மல் அரசு செயற்­ப­டு­கின்­றது. இந்­திய அர­சு­டன் பகைக்­கக் கூடாது என்­ப­தால் இவ்­வாறு செயற்­ப­டு­கின்­றதா ? அல்­லது என்ன கார­ணத்­துக்­காக அரசு பேசா­மல் இருக்­கின்­றது. இல்லை பாதிக்­கப்­ப­டு­வது வடக்குத் தமிழ் மீன­வர்­கள் என்­ப­தால் பார­பட்­சம் காட்­டப்­ப­டு­கின்­றதா ?

2010ஆம் ஆண்­டி­லி­ருந்து இந்­திய மீன­வர்­க­ளின் அத்­து­மீ­றிய மீன்­பிடி தொடர்­பில் பேச்சு நடக்­கின்­றது. ஆனால் முடிவு இன்­ன­மும் எட்­டப்­பட்­ட­தா­கத் தெரி­ய­வில்லை. இழு­வை­ம­டியைத் தடை செய்­யும் சட்­டம் நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்டு கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதி அர­சி­த­ழில் பிர­சு­ரிக்­கப்­பட்­டா­கி­லும் விட்­டது.
இழு­வை­ம­டி­யைப் பயன்­ப­டுத்தி மீன்­பி­டி­ யில் ஈடு­பட்­டால் சிறைத்­தண்­டனை அல்­லது தண்­டம் என்று அதில் குறிப்­பி­டப்­பட்­டுள் ளது. அந்­தச் சட்­டத்துக்கு அமை­வாக இன்­னும் ஏன் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. இப்­போ­தும் கைதா­கும் இந்­திய மீன­வர்­கள் விடு­விக்­கப்­பட்­டுக் கொண்­டு­தானே இருக்­கின்­றார்­கள்.

தண்­ட­னை­கள் கடு­மை­யாக்­கப்­பட்­டால்­தான் குற்­றங்­கள் குறை­யும். இந்­திய மீன­வர்­கள் விட­யத்­தில் மிகக் கடு­மை­யாக நடப்­ப­தன் ஊடா­கவே, அவர்­க­ளது வரு­கை­யைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யும். வடக்கு மீன­வர்­கள் மீன்­பி­டி­யில் மீண்டு வரு­வ­தற்கு இது மிக­வும் முக்­கி­ய­மா­னது. இழு­வை­ம­டிப் பட­குப் பாதிப்புத் தொடர்­பில் பேசும்­போது, எம்­ம­வர்­க­ளும் எமது கண்­ணைக் குத்­தும் செயற்­பா­டு­க­ளில் ஈடு­ப­டு­வ­தை­யும் இங்கே குறிப்­பிட்­டா­க­வேண்­டி­யுள்­ளது.

ஆபத்­தான கழி­வு­கள்

வடக்­கின் யாழ்ப்­பா­ணத்­தில் குரு­ந­கர், வல்­வெட்­டித்­துறை, நெடுந்­தீவு அதே­போன்று மன்­னா­ரில் பேசாலை, பள்­ளி­முனை இந்­தப் பிர­தே­சங்­க­ளைச் சேர்ந்த ஒரு சிறு குழு­வி­னர் இழு­வை­ம­டி­யைப் பயன்­ப­டுத்தி மீன்­பி­டி­யில் ஈடு­ப­டு­கின்­ற­னர். இவர்­கள் தங்­கள் வளங்­களை தாங்­களே அழிக்­கும் கைங்­க­ரி­யங்­க­ளில் ஈடு­ப­டு­கின்­ற­னர். இந்­தத் தொழி­லைக் கைவி­டு­மாறு கோரி­னால், முத­லில் இந்­திய மீன­வர்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­துங்­கள். அதன் பின்­னர் எங்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுங்­கள் என்­கின்­ற­னர்.
இவர்­க­ளுக்கு மாற்­றுத் தொழில் உப­க­ர­ணங்­கள் வழங்­கப்­ப­ட­வேண்­டும். அதனை அரசு உட­ன­டி­யா­கச் செய்­ய­வேண்­டும். இந்­திய மீன­வர்­க­ளின் அத்­து­மீ­ற­லால் எமது வளம் அழி­வ­டை­வ­தைப் பற்றி முன்­னர் பேசி­னேன். தற்­போது இந்­தி­யக் கழி­வு­க­ளால் எமது கடல் வளம் அழி­யப் போவ­தை­யும் நான் இங்கே குறிப்­பிட விரும்­பு­கின்­றேன். இந்­தி­யா­வின் ஆபத்­தான மருத்­து­வக் கழி­வு­கள், குப்­பை­கள், உக்­காத பொருள்­கள் இந்து மா சமுத்­தி­ரப் பெருங்­க­ட­லில் கொட்­டப்­ப­டு­கின்­றன. அவை கட­லில் கலந்து இப்­போது யாழ்ப்­பா­ணத்­தின் தொண்­டை­மா­னாறுக் கரை­யோ­ரத்­தில் ஒதுங்­கு­கின்­றது.
கழி­வு­கள் கட­லில் கொட்­டப்­ப­டு­வ­தன் ஆபத்து இங்கு எல்­லோ­ருக்­கும் தெரிந்­தி­ருக்­கும். ஆபத்­தான மருத்­து­வக் கழி­வு­களைக் கொட்­டு­வ­தால் கடல்­வாழ் உயி­ரி­னங்­க­ளுக்கு ஆபத்து ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்பு உள்­ளது. இதற்கு எதி­ரா­க­வும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும் என்று இந்த உய­ரிய சபை­யில் வலி­யு­றுத்­திக் கூறு­கின்­றேன் -– என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget