2020ஆம் ஆண்டு அரச தலைவராகத் தெரிவு செய்யப்படப்போவது யார்? என்று தற்போது நாட்டில் பிரபல்யமாக உள்ள ஐந்து பேரின் பெயர்களை முன்னிலைப்படுத்திய கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடகப்பிரிவு நடத்திய கருத்துக்கணிப்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவே அரச தலைவராகத் தெரிவு செய்யப்படுவார் என்று அதிகமானவர்கள் கூறியுள்ளனர்.18 தொடக்கம் 35 வயதுவரையான 505 பேரிடம் நடத்திய இந்தக் கருத்துக்கணிப்பில் கோத்தபாய ராஜபக்ச, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட ஐவரின் பெயர்கள் முன்னிலைப்படுத்தப்பட் டன.
இதில் 39.18 வீதமானவர்கள் கோத்தபாய ராஜபக்சவுக்கும், 28.64 வீதமானவர்கள் சஜித் பிரேமதாஸ வுக்கும், 9.18 வீதமானவர் கள் மைத் திரிபால சிறிசேனவுக்கும், 8.64 வீதமானவர்கள் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் வாக்களித்துள்ளனர்.
நாட்டில் செப்ரெம்பர் முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அரசியல் நிலமைகளை அடிப்படையாக கொண்டே இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment