
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி, டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து ஷிகர் தவண், முரளி விஜய் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்க உள்ளனர்.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து நாக்பூரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் இந்திய அணி, கடைசி டெஸ்ட் போட்டியை சந்திக்கிறது.
அணிகள் விவரம்:
இந்தியா: விராட் கோலி (கேப்டன் ), முரளி விஜய், "கே.எல். ராகுல், ஷிகர் தவண், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, விருத்திமான் சாஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், விஜய் சங்கர், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி.
இலங்கை: தினேஷ் சந்திமால் (கேப்டன்), திமுத் கருணாரத்னே, சதீரா சமரவிக்ரமா, லகிரு திரிமானே, திக்வெலா, ஏஞ்சலோ மேத்யூஸ், திலுருவன் பெரேரா, ஜெப்ஃரி வாண்டர்சே, ரோஷன் சில்வா, தசன் ஷனகா, லக்மல், லகிரு கமகே, லக்சன் சந்தகன், தனஞ்ஜெயா டி சில்வா.
Post a Comment