யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வு நாளை 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது. இரண்டாவது அமர்வு அடுத்தாண்டு மார்ச் மாதம் நடத்தப்படும்.இவ்வாறு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசியர் இ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
33ஆவது பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வு தொடர்பாக நேற்று யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தெரிவித்ததாவது:-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இம்முறை இரண்டு பகுதிகளாக நடத்தப்படவுள்ளன. முதலாவது பகுதி எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 5 அமர்வுகளாக நடைபெறவுள்ளது.
இந்த பட்டமளிப்பு விழாவில் உயர் பட்டப் படிப்புகள் பீடம், முகாமைத்துவ வணிக பீடம், கலைப்பீட சட்டத்துறை, விவசாய பீடம், மருத்துவ பீடத்தின் இணை மருத்துவ அலகு, சித்த மருத்துவத் துறை, வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடம், வணிக கற்கைகள் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 816 பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.
Post a Comment