தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.கொழும்பிலுள்ள மேற்குலக நாடுகளின் தூதரகங்கள் ஊடாகவும், பல நாடுகளின் தூதரகங்கள் ஊடாகவும் இவ்வாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆசனப் பங்கீட்டு விவகாரத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகுவதாக ரெலோ அறிவித்தது.
கொழும்பிலுள்ள மேற்குநாடுகளின் தூதரங்கள் தமிழ்க் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்ளுடன் தொலைபேசி ஊடாகப் பேசியுள்ளன என்று அறிய முடிகின்றது.
கூட்டமைப்பாகச் செயற்பட வேண்டும் என்று கண்டிப்பான அறிவுத்தல் வழங்கப்பட்டது என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியொன்றின் தலைவர் கூறினார்.
Post a Comment