ஒக்கி புயலில் சிக்கிய மாயமான மீனவர்களின் எண்ணிக்கையை மாநில வாரியாக, மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதில், டிசம்பர் 15 வரை 400 தமிழக மீனவர்கள் மாயமாகி உள்ளதாகவும், டிசம்பர் 20 வரை 453 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்கக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் டிசம்பர் 22 ம் தேதியன்று தமிழக அரசு அளித்த பதிலில் ஒக்கி புயலில் சிக்கி மாயமான தமிழக மீனவர்கள் 271 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், ஒக்கி புயலில் மாயமான மீனவர்கள் குறித்து பார்லி., டிசம்பர் 23 ம் தேதி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 275 தமிழக மீனவர்கள் மாயமாகி இருப்பதாக கூறினார்.
மாயமான மீனவர்கள் குறித்து தமிழக அரசு மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களுக்கு இடையே முரண்பாடு நிலவு வரும் நிலையில், இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக மத்திய அரசு இன்று புதிய புள்ளி விபரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது :
டிசம்பர் 15 வரை மாயமான மீனவர்கள் :
தமிழகம் - 400கேரளா - 261லட்சத் தீவுகள் - 0மொத்தம் : 661
டிசம்பர் 20 வரை மீட்கப்பட்ட மீனவர்கள்வி : தமிழகம் - 453கேரளா - 362லட்சத்தீவுகள் - 30மொத்தம் - 845
மேலும், எங்களுக்கு கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் மாயமான மற்றும் மீட்கப்பட்ட மீனவர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மாயமான மீனவர்கள் குறித்து தகவல் தர வேண்டிய பொறுப்பு தமிழக மீன்வளத்துறைக்கு உள்ளது எனவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Post a Comment