Ads (728x90)

கிறிஸ்துமஸ் நாளில் மெல்போர்ன் வீதிகளில் சுற்றித் திரிந்த சிறிய முதலையின் உரிமையாளரைத் தேடும் பணியில் ஆஸ்திரேலிய காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து வெளியான தகவல்களின்படி, ''முதலை இருந்த பகுதிக்கு அருகில் இருந்த வீடுகளில் வசித்தவர்கள் அதனைக் கண்டு அச்சமடைந்தனர். உடனடியாக விக்டோரியா காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. நம்பிக்கை இல்லாமல் அங்கு வந்த போலீஸார், பொதுமக்கள் பெரிய பல்லியைக் குறிப்பிட்டிருக்கலாம் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அங்கு சுமார் 1 மீட்டர் நீளத்தில் பெரிய நன்னீர் முதலை இருந்தது.

இதனையடுத்து பாம்பு பிடிப்பவரான மார்க் பெல்லி அழைக்கப்பட்டார். அங்கு கூட்டம் கூடியதும் முதலை, புதர்களுக்குள் ஓடி மறைய முயன்றது. ஆனால் வாலை இழுத்துப் பிடித்து முதலை மீட்கப்பட்டது.

தற்போது முதலை மாநில வனவிலங்கு வாரிய அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியாவில் செல்லப்பிராணி உரிமையாளர்கள் சுமார் 2.5 மீட்டர் நீளம் வரை முதலைகளை வளர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

Recent News

Recent Posts Widget