Ads (728x90)

6 இஸ்லாமிய நாடுகளுக்கு அமெரிக்க பயணத்தடை என்ற அதிபர் டொனால்டு டிரம்பின் உத்தரவை முழு அளவில் செயல்படுத்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்காவில் வன்முறை சம்பவங்களை குறைக்கும் நோக்கில் சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, ஏமன் மற்றும் சூடான் நாடுகளின் குடிமகன்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கும் வகையில் அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

இதனை எதிர்த்து கீழ் நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றை எதிர்த்து டிரம்ப் அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கடந்த மாதம் டிரம்ப் அரசின் உத்தரவை அமல்படுத்த அனுமதி அளித்த நீதிமன்றம், இருப்பினும் ஆண்டின் முடிவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் இவ்வழக்கு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 2 நீதிபதிகள் மட்டுமே அதிபரின் உத்தரவை தடை செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
நீதிபதிகள் ரூத் பேடர் கின்ஸ்பர்க், சோனியா சோடாமயோர் ஆகியோர் டிரம்பின் கொள்கை முடிவை முழு அளவில் செயல்பட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget