Ads (728x90)

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்டில், நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 67 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 134 ரன்னுக்கு சுருண்டது. வேக்னர் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். நியூசிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 520 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

டெய்லர் 93, நிகோல்ஸ் 67, கிராண்ட்ஹோம் 105, பிளண்டெல் 107* ரன் விளாசினர். இதையடுத்து 386 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ், 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 214 ரன் எடுத்திருந்தது. பிராத்வெயிட் 79 ரன், ஷாய் ஹோப் 21 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிராத்வெயிட் 91 ரன் எடுத்து (221 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) சான்ட்னர் பந்துவீச்சில் வெளியேறினார்.

ஷாய் ஹோப் 37 ரன், ராஸ்டன் சேஸ் மற்றும் அம்ப்ரிஸ் தலா 18 ரன் எடுத்து எடுத்து பெவிலியன் திரும்ப, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் 106 ஓவரில் 319 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்ரியல் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து பந்துவீச்சில் ஹென்றி 3, போல்ட், கிராண்ட்ஹோம், வேக்னர் தலா 2, சான்ட்னர் 1 விக்கெட் வீழ்த்தினர். நீல் வேக்னர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இன்னிங்ஸ் மற்றும் 67 ரன் வித்தியாசத்தில் வென்ற நியூசி. அணி 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் ஹாமில்டன் செடான் பார்க் மைதானத்தில் டிச. 9ம் தேதி தொடங்குகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget