கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ஜிகர்தண்டா. பாபி சிம்ஹாவிற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்று தந்தது. இப்படம் ஹிந்தியில் ரீ-மேக்காக உள்ளது. அஜய் தேவ்கன் தயாரிக்க, நிஷிகாந்த் காமத் இயக்குகிறார்.பாபி சிம்ஹா வேடத்தில் சஞ்சய் தத்தும், சித்தார்த் வேடத்தில் பர்கான் அக்தரும் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் நடிக்க தமன்னாவிடம் பேசி வருகிறார் அஜய். லட்சுமி மேனன் நடித்த ரோலில் அவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
அஜய் தேவ்கன் உடன் ஹிம்மாத்துவாலா என்ற படத்தில் தமன்னா நடித்திருக்கிறார். அதனால் நிச்சயம், அஜய் படத்தில் அவர் நடிப்பார் என நம்பப்படுகிறது. விரைவில் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
Post a Comment