Ads (728x90)

தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடிகர் விஷாலை யார் என கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தற்போது ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட உள்ள விஷால் தமிழ்கத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளார்.

நடிகர் சிரஞ்சீவியின் மகனுன் நடிகருமான ராம்சரண் அவரது மனைவி உபாசனாவுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். தரிசனத்தை முடித்து கொண்டு காரில் புறப்பட்ட ராம்சரணிடம் விஷாலின் அரசியல் குறித்து கேள்வி எழுப்பட்டது.அப்போது, அண்டை மாநில அரசியல் குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டியின் பூர்வீகம் ஆந்திரா. அவர் தெலுங்கு படத் தயாரிப்பாளராக இருந்தார். பின்னர் குடும்பத்துடன் சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில், ராம்சரண் விஷாலை யார் என கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget