தெலுங்கு சினிமாவில் சீனியர் நடிகர் ஜெகபதிபாபு. சமீபகாலமாக தென்னிந்திய மொழிகளில் அவர் பரவலாக நடித்து வருகிறார். குறிப்பாக, வில்லன் வேடங்களாக நடித்து வரும் ஜெகபதிபாபு, தற்போது கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் ரவிதேஜா நடிக்கும் நேலா டிக்கெட் என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.மேலும், தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி, ரங்கஸ்தலம், ஆடகல்லு ஆகிய தெலுங்கு படங்களில் தற்போது நடித்து வரும் ஜகபதிபாபுவுக்கு, நேலா டிக்கெட் படத்தில் ரவிதேஜாவுக்கு இணையான வேடம் கொடுக்கப்படுகிறதாம்.
இந்தி நடிகை மாளவிகா ஷர்மா நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 5-ந்தேதி முதல் ஐதராபாத்தில் தொடங்குகிறது.
Post a Comment