
தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே தெலுங்கு, கன்னடம், இந்தி, பஞ்சாபி மொழி படங்களில் நடித்து வந்தார். ஹேட் ஸ்டோரி என்ற இந்திப் படத்தில் படு கவர்ச்சியாக நடித்து பரபரப்பு கிளப்பினார். வாய்ப்புகள் குறைந்ததும் ஒரு பாடலுக்கு ஆடினார், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனார். சின்னத்திரை சீரியல்களில், குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
சுர்வின் சாவ்லா பல ஆண்டுகளாக அக்ஷ்ய் தாக்கர் என்ற தொழிலதிபரை காதலித்து வந்தார். அந்த காதலை மீடியாக்கள் வெளிப்படுத்தியபோது அதனை மறுத்தும் வந்தார். இந்த நிலையில் அக்ஷ்ய் தாக்கரை சுர்வின் திருமணம் செய்து கொண்ட தகவலை தனது பேஸ்புக்கில் படத்துடன் வெளியிட்டிருக்கிறார். அதோடு தன்னை வாழ்த்துமாறு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
இந்த திருமணம் 2015ம் ஆண்டே நடந்து விட்டது என்றும் பட வாய்ப்புகள் குறைந்து விடுமோ என்கிற அச்சத்தில் சுர்வின் திருமணத்தை மறைத்தார். இப்போது அதனை வெளியிட்டுள்ளார் என்கிறார்கள்.
Post a Comment