5 முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனையான மேரி கோம், தேசிய குத்துச்சண்டை போட்டியின் பார்வையாளராக கடந்த மார்ச் மாதம் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் ஆசிய குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார்.இதற்கிடையே சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் வீரர்கள், தேசிய போட்டியின் பார்வையாளர்களாக செயல்படக்கூடாது என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மேரி கோம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேரி கோம் கூறும்போது, “தேசிய பார்வையாளர் பதவியை 10 நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்துவிட்டேன். அமைச்சருடன் ஆலோசித்த பிறகு இந்த முடிவை எடுத்தேன்” என்றார்.
Post a Comment