Ads (728x90)

இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர் கயான் சேனாநாயக்கவை திருமண விருந்துபசாரத்திற்கு விராட் கோலி அழைத்துள்ளர்.
மும்பையில் நேற்று நடைபெற்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
கடந்த 21ம் திகதி புதுமண தம்பதியினர் இந்தியா திரும்பினர். அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதைத்தொடர்ந்து, டெல்லி தாஜ் ஹோட்டலில் விராட் கோலி – அனுஷ்கா ஜோடியின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இருவீட்டாரின் உறவினர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இந்நிலையில், மும்பையில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் நேற்று மற்றொரு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில், இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர் கயான் சேனாநாயக்க மற்றும் அனில் கும்ப்ளே, சுனில் கவாஸ்கர், வீரேந்தர் சேவாக், உமேஷ் யாதவ்,குல்தீப் யாதவ், செடேஷ்வர் புஜாரா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, சந்தீப் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், சாய்னா நேவால் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், பிரபல இசையமைப்பாளர் மற்றும் ஷாருக் கான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ரேகா, கங்கனா ரனாவத், கரன் ஜோகர் உள்பட பாலிவுட் பிரபலங்கள் இந்த விருந்தில் பங்கேற்று புதுமண தம்பதியரை வாழ்த்தினர்


Post a Comment

Recent News

Recent Posts Widget