இலங்கை ஒலிம்பிக் சங்கத்தின் தேர்தலை உடனே நடத்தக்கோரி சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இலங்கையின் 14 தேசிய விளையாட்டு சங்கங்கள் சேர்ந்து கையெழுத்திட்டு இந்த கடிதத்தை சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்திற்கு அனுப்பிவைத்துள்ளன.
கடந்த 8 வருடங்களாக ஒரே நிர்வாகத்தின் கீழ் தேசிய ஒலிம்பிக் சங்கம் நடைபெற்றுவருவதாகவும் அதனால் விளையாடுத்துறை பாரிய வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக ஹேமசிறி பெர்னாண்டோ செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment