பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள குவாதரில் சீன அரசு மிகப் பெரிய துறைமுகத்தை நிர்மாணித்துள்ளது. அந்த துறைமுக பாதுகாப்புக்காக அங்கு சீன போர்க்கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளன.இதைத் தொடர்ந்து குவாதர் துறைமுகத்தையும் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தையும் இணைக்கும் வகையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு சீனா நிதியுதவி வழங்கி வருகிறது. பாகிஸ்தான் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சாலை திட்டப் பணிகளில் ஊழல் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதைத் தொடர்ந்து இத்திட்டப் பணிகளுக்காக பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதியுதவியை சீன அரசு நிறுத்தியுள்ளது. இது பாகிஸ்தான் அரசு வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குவாதர்-ஜின்ஜியாங் நெடுஞ்சாலை பலுசிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்கிறது. நெடுஞ்சாலையோரம் உள்ள பலுசிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிலங்களை குத்தகைக்கு எடுத்து அங்கு பயிர்களை சாகுபடி செய்யவும் சீனா திட்டமிட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Post a Comment