Ads (728x90)

தங்கர் பச்சான் இயக்கியுள்ள ‘களவாடிய பொழுதுகள்’, மூன்று வருடங்கள் கழித்து தற்போது ரிலீஸாக இருக்கிறது.தங்கர் பச்சான் இயக்கத்தில், பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ் ராஜ், சத்யன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘களவாடிய பொழுதுகள்’. பரத்வாஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, தங்கர் பச்சானே ஒளிப்பதிவு செய்துள்ளார். ஐங்கரன் நிறுவனம் சார்பில் கருணாகரன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

3 வருடங்களுக்கு முன்பே இந்தப் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. ஆனால், பைனான்ஸ் பிரச்னை காரணமாக ரிலீஸாகாமல் அப்படியே நின்றுவிட்டது. டிசம்பரில் இந்தப் படத்தி ரிலீஸ் செய்ய இருப்பதாக கருணாகரன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget