
சித்தார்த் தற்போது மலையாளத்தில் திலீப் கதாநாயகனாக நடிக்கும் கம்மார சம்பவம்' என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது மலையாளத்தில் சித்தார்த்தின் முதல் படமாகும். ரதீஷ் அம்பாட் என்பவர் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த சமயத்தில் தான் நடிகர் திலீப், நடிகை வழக்கில் கைதாகி சிறை சென்றார்.
பின்னர் சிறையிலிருந்து ஜாமினில் வந்ததுமே இந்தப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் துவங்கப்பட்டது. இதில் சித்தார்த்தும், திலீப்பும் இணைந்து நடிக்க வேண்டி இருந்த மீதி காட்சிகள் சமீபத்தில் தேனியில் வைத்து படமாக்கினர். இத்துடன் சித்தார்த் நடிக்கும் காட்சிகள் முழுதும் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், படக்குழுவினரிடம் இருந்து விடைபெற்றுள்ளார் சித்தார்த்.
Post a Comment