
தெலுங்கில் திரிவிக்ரம் இயக்கத்தில், பவன்கல்யாண் நடித்து வரும் அவரது 25வது படம் அக்னதாவாசி. இந்தபடத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வாரணாசியில் நடைபெற்றதை அடுத்து இறுதிகட்ட பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஜனவரி 10-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தை உலக அளவில் வெளியிடுகிறார்கள்.
குறிப்பாக, பவன்கல்யாணின் வெள்ளி விழா படம் என்பதால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடப்பட உள்ளது. அதோடு அமெரிக்காவில் 209 இடங்களில் இந்த படத்தை வெளியிடுகிறார்களாம். இது பாகுபலி 2 படத்தை விட அதிகளவில் ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment