Ads (728x90)

 உலக ஹாக்கி லீக் பைனல் தொடரின் பிரிவில், இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதிய லீக் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று நடந்த இப்போட்டியில், இங்கிலாந்து வீரர் அன்செல் லியாம் 4வது நிமிடத்திலேயே அபாரமாக பீல்டு கோல் அடித்து அந்த அணிக்கு முன்னிலை கொடுத்தார். இதையடுத்து பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய ஆஸி. அணிக்கு வொதர்ஸ்பூன் டைலன் 33வது நிமிடத்தில் கோல் அடித்து சமநிலை ஏற்படுத்தினார்.

ஆட்டத்தின் 41வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஆஸி. வீரர் பிளேக் கோவர்ஸ் மின்னல் வேகத்தில் கோல் அடிக்க, அந்த அணி 2-1 என முன்னிலை பெற்றது. இங்கிலாந்தின் பில் ரோபர் 54வது நிமிடத்தில் பீல்டு கோல் போட்டு 2-2 என சமன் செய்தார்.
மேற்கொண்டு கோல் அடிக்க இரு அணி வீரர்களும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் 2-2 என டிரா செய்தன.

Post a Comment

Recent News

Recent Posts Widget