இந்திய வீரர் விஜேந்தர் சிங் தனது ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள, ஆப்ரிக்க சாம்பியன் எர்னஸ்ட் அமுஸுவுடன் மோதுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் களமிறங்கியதில் இருந்து தொடர்ச்சியாக 9 வீரர்களுக்கு எதிராக வெற்றியை வசப்படுத்தி அசத்தியுள்ளார் விஜேந்தர் சிங். கடந்த ஆகஸ்டில் சீனாவின் நம்பர் 1 பாக்சர் ஸுல்பிகார் மைமதியாலியை வீழ்த்தி டபுள்யு.பி.ஓ ஓரியன்டல் ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இந்த நிலையில், டபுள்யு.பி.ஓ ஓரியன்டல் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள, ஆப்ரிக்க சாம்பியன் எர்னஸ்ட்டுடன் மோதவுள்ளார். இந்திய பாக்சிங் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டி ஜெய்பூரில் வரும் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எர்னஸ்ட் இதுவரை மோதியுள்ள 25 போட்டிகளில் 23 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ளார்.
Post a Comment