கனடாவில் இருந்து தமிழ் மாணவியும் அவரது குடும்பத்தினரும் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாகக் கனேடிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.21 வயதான லியோனி பவித்ரா லோரன்ஸ் என்ற மாணவியின் குடியுரிமை யில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவரும் அவரது குடும்பத்தினரும் நாடு கடத்தப்படவுள்ளனர்.
இவர்களின் நாடு கடத்தலைத் தடுத்து நிறுத்து மாறு கனேடிய அரசியல்வாதிகள் மற்றும் அந்த நாட்டு மக்கள் அழுத்தம் கொடுத்தபோதும், அது குறித்து அரசு கவனம் செலுத்தவில்லை என்று சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
‘இலங்கைக் குடும்பத்தை நாடு கடத்த எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றேன்’ என்று ஜனநாயகக் கட்சி உறுப்பினர் அலெக்ஸ்ஸாண்டர் தெரிவித்தார்.
Post a Comment