Ads (728x90)


பிரபுதேவா, வெற்றிகரமாக தன் இரண்டாவது இன்னிங்சை துவக்கி விட்டார். தேவி படத்தை தொடர்ந்து, நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த களவாடிய பொழுதுகள் திரைப்படம் திரைக்கு வருகிறது.

இதுவரை நடித்த படங்களில் எல்லாம், ஆடல், பாடல் என, உற்சாகமான இளைஞனாகவே வலம் வந்த பிரபுதேவா, இந்த படத்துக்காக, முதல் முறையாக அடித்தட்டு சமூகத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாக வாழ்ந்து காட்டியுள்ளாராம்.

இதில், அவருடன் ஜோடி சேர்ந்திருப்பது, ரோஜாக்கூட்டம் படத்தின் நாயகி பூமிகா. பணக்கார பெண்ணாக பூமிகாவும், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனாக பிரபுதேவாவும் இதில், சிறப்பாக நடித்துள்ளனராம்.

'இந்த படத்தின் மூலம், பிரபுதேவாவுக்கு புது அடையாளம் கிடைக்கும்' என்கிறது, படக்குழு.

Post a Comment

Recent News

Recent Posts Widget