உயர்தரப் பரீட்சையில் பௌதீகவியல் விஞ்ஞானப் பிரிவில் 3 ஏ பெறுபேறுகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் திவாகரனை வட மாகாண ஆளுநர் சந்தித்தார்.இச் சந்திப்பு மாணவனின் வீட்டில் இடம்பெற்றது. மாணவனைச் சந்தித்த வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே தனது வாழ்த்துக்கைளைத் தெரிவித்தார்.
அத்துடன் மாணவனின் பெற்றோரையும் சந்தித்துக் கலந்துரையாடினார். தனது தனிப்பட்ட நிதியிலிருந்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையையும் மாணவனுக்கு அன்பளிப்புச் செய்தார்.
Post a Comment