Ads (728x90)


தெலுங்கில் வெளிவந்த பக்திப்படமான ஓம் நமோ வெங்கடேசாயா, தமிழில் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. திருப்பதியில் வாழ்ந்த ராமா என்கிற வெங்கடேச பெருமாளின் பக்தன் ஒருவரின் வாழ்க்கையில் இறைவன் விளையாடிய கதை. அந்த பக்தனாக நாகார்ஜுனா நடித்துள்ளார். அவரது மனைவியாகவும், கிருஷ்ணரை ஒருதலையாக காதலிக்கும் ஆண்டாளாகவும் நடித்திருக்கிறார் அனுஷ்கா. படம் வெற்றி பெறவில்லை என்றாலும், அனுஷ்காவின் ஆண்டாள் ரோல் அனைவரையும் கவர்ந்தது.

இப்படத்தை இயக்கியுள்ளவர் சுமார் 108 படங்களுக்கும் மேல் இயக்கியவரும், பாகுபலி புகழ் எஸ்.எஸ்.ராஜமெளலியின் குருவுமான கே.ராகவேந்திர ராவ். இது பக்தி ரசமும் சமூகப் பின்னணியும் கலந்து எடுக்கப்பட்டுள்ளது. மகாபாரத கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்ற சௌரப்ஜெயின் வெங்கடேச பெருமாள் வேடம் ஏற்று நடித்துள்ளார். பாகுபலி புகழ் கீரவாணி இசையமைத்துள்ளார். படத்தில் மொத்தம் 12 பக்தி ரசம் சொட்டும் பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது.

இந்த படம் பல ஆன்மீக புராணம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது. பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு என்ன? திருமலை உருவான விதம் எப்படி? ஆனந்த நிலையம் என பெயர் வரக்காரணம் என்ன? வேங்கடம் என்ற சொல்லுக்கு பொருள் விளக்கம் என்ன? பாலாஜி என்று பெயர் வரக்காரணம் என்ன? திருமலையில் முதலில் யாரை வணங்குவது? எனப் பல கேள்விகளுக்கான விளக்கங்களை காட்சிகளாக அமைத்துள்ளனர்.

படத்தைப் பார்த்த நடிகர் சிவகுமார் "அண்மைக் காலங்களில் வந்துள்ள படங்களில் இது ஒரு முக்கியமான பக்திப் படம். சுவாரஸ்யமாக பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. படம் பார்த்து முடித்ததும் திருப்பதி தேவஸ்தானம் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது" என்று பாராட்டியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget