Ads (728x90)


2015-ம் ஆண்டு வெளிவந்த 'ஜுராசிக் வேர்ல்டு' படத்தின் அடுத்த பாகமாக வெளிவர இருக்கும் 'ஜுராசிக் வேர்ல்டு - பாலன் கிங்டம்' படத்தின் டிரைலர் இரண்டு தினங்களுக்கு முன்பு யு டியூபில் வெளியிடப்பட்டது. வெளியான இரண்டு நாட்களிலேயே இந்த டிரைலருக்கு 1 கோடியே 64 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன.

முந்தைய பாகத்தில் ஜுராசிக் வேர்ல்டு பூங்காவையே டைனோசர்கள் அழித்துவிடும். அந்தப் பூங்காவிலிருந்து அனைவருமே தப்பித்துவிடுவார்கள். அந்த பூங்கா அமைந்திருக்கும் தீவில் உள்ள எரிமலைகள் மீண்டும் உயிர்த்தெழ ஆரம்பிக்கின்றன. அதனால், அந்த ஜுராசிக் வேர்ல்டு பூங்காவிற்குள் உயிரோடு இருக்கும் மீதமுள்ள டைனோசர்களைக் காப்பாற்ற கிறிஸ் பிராட், பிரைஸ் டல்லாஸ் ஹோவர்ட் ஆகியோர் மீண்டும் பூங்காவிற்குள் செல்கிறார்கள்.


கிறிஸ் பிராட், அவர் ஆசையாக வளர்த்த ரேப்டாரைத் தேடிக் கண்டுபிடிக்க ஆசைப்படுகிறார். அவர்கள் பூங்காவிற்குள் நுழைந்து தேட ஆரம்பிக்கும் போது எரிமலையும் வெடித்துச் சிதற ஆரம்பிக்கிறது. அதன் பின் நடக்கும் சம்பவங்கள்தான் 'ஜுராசிக் வேர்ல்டு - பாலன் கிங்டம்' படத்தின் கதை.

2 நிமிடம் 26 வினாடிகள் ஓடும் டிரைலர் பிரமிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. முந்தைய ஜுராசிக் சீரிஸ் படங்களை விட இந்தப் படம் எந்த அளவிற்கு ரசிகர்களை ஈர்க்கப் போகிறது என்பது படம் வெளியான பிறகே தெரியும். ஹாலிவுட் படங்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கப் போகிறது என்பதை படம் வெளியான பிறகே தெரிய வரும். அமெரிக்க ஊடகங்கள் இந்த டிரைலரை தாறுமாறாக விமர்சித்து வருகிறார்கள்.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் நிர்வாகத் தயாரிப்பில் வெளிவர உள்ள இந்தப் படத்தை ஜே.எ.பயானோ இயக்குகிறார்.

இப்படம் 2018 ஜுன் மாதம் 22ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget