Ads (728x90)

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் இந்தியா முதல்முறையாக பங்கேற்றது.

சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினராகக் கொண்ட எஸ்சிஓ அமைப்பில், இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த ஆண்டுதான் புதிதாக சேர்ந்தன. இந்த அமைப்பு அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் இணைந்து செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த அமைப் பின் ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான 2 நாள் ஆலோசனைக் கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெற்றது. நேற்று இந்த கூட்டம் முடிந்தது. இந்த அமைப்பில் புதிதாக இணைந்த இந்தியா முதல் முறையாக பங்கேற்றது. மேஜர் ஜெனரல் அஜய் சேத் தலைமையிலான குழுவினர் இதில் பங்கேற்றனர். இந் தக் கூட்டத்தில் உறுப்பு நாடுகள் ராணுவ ரீதியாக இணைந்து செயல்படுவதில் உள்ள பிரச்சினைகள் தொடர் பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

சிக்கிம் மாநிலத்தை ஒட்டிய டோக்லாம் பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவம் இடையே கடந்த ஆண்டு மோதல் நிலவியது. இதனால் ஏற்பட்ட பிரச்சினை உட்பட பல்வேறு கருத்து வேறுபாடுகளால் கசந்துள்ள உறவை மேம்படுத்துவதற்கான களமாக எஸ்சிஓ அமைப்பை இரு நாடுகளும் கருதுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget