Ads (728x90)

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா காயமடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்திய அணியினருடன் தினேஷ் கார்த்திக் இணையவுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி கண்டது. இந்த டெஸ்டில் சாஹா இடம்பிடித்து விளையாடி யிருந்தார்.

இந்த நிலையில் 2-வது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியின்போது சாஹாவுக்கு காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து செஞ்சுரியன் டெஸ்ட் போட்டியில் பார்த்திவ் பட்டேல் களமிறங்கி விளையாடி வருகிறார். இந்த நிலையில்தான் இந்திய அணியில் இணைய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அழைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலர் (பொறுப்பு) அமிதாப் சவுத்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

ரித்திமான் சாஹாவுக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் பெயரை, அகில இந்திய சீனியர் தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது. விரைவில் அவர் அணியினருடன் இணையவுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

2-வது டெஸ்ட் போட்டியின்போது முக்கிய நேரங்களில் பார்த்திவ் கேட்சுகளை தவறவிட்டதால் அவர் மீது தேர்வுக் குழுவினர் அதிருப்தி அடைந்துள்ளனர். அதனால்தான் தினேஷ் அழைக்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

Recent News

Recent Posts Widget