ஆண்களுக்கு மதுபானசாலை திறக்க முடியுமாயின் பெண்களுக்கும் மதுபான சாலைகள் திறக்க முடியும். எனவே அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளில் தவறுகள் கிடையாது என பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியின் போது 2000 விகாரைகள் மூடப்பட்டதுடன் 2000 மதுபானசாலைகள் திறக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மதுபானசாலை தொடர்பான வர்த்தமானி தொடர்பில் பல்வேறு கருத்துகளை முன்வைக்கின்றனர். எனினும் முன்னைய ஆட்சியின் போது 2000 விகாரைகள் மூடப்பட்டதுடன் 2000 மதுபான சாலைகள் திறக்கப்பட்டன. இதனை பற்றி யாரும் பேசவில்லை. எனவே அப்போது ஆரம்பித்த பணிகளே தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
அத்துடன் பெண்களும் மதுபானசாலைகள் திறக்க முடியும் என்ற தீர்மானத்தில் எந்தவொரு தவறும் கிடையாது. ஏனெனில் ஆண்களினால் மதுபானசாலைகளை திறக்க முடியுமாயின் பெண்களுக்கு மதுபானசாலைகளை திறக்க முடியும். வெளிநாடுகளில் பெண்கள் விமானம் ஓட்டுகின்றனர். மதுபானம் அருந்துகின்றனர். எனவே இலங்கையில் அவ்வாறு செய்வதற்கு அனுமதி வழங்குவதில் தவறு கிடையாது.
ஆண்களுக்கு செய்ய முடியுமானவை பெண்களுக்கும் செய்ய முடியும் என்றார்.
Post a Comment