இராணுவத்தின் பிடியில் உள்ள மயிலிட்டி காச நோய் வைத்தியசாலை விரைவில் சுகாதாரத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சுத் தகவல்கள் இதனைத் தெரிவித்தன.‘‘காசநோய் வைத்தியசாலையை உடனடியாகவே விடுவிப்பதற்கான ஏற்பாடுகளே இடம்பெறுகின்றன’’ என்று அவை தெரிவித்தன.
வடக்கு மாகாணத்தில் காச நோய் சிகிச்சைக் காக இருந்தது இந்த வைத்தியசாலை ஒன்றே. எனினும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அது இராணுவ உயர் ◌பாதுகாப்பு வலயத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் காச நோய் சிகிச்சைக்கு வடக்கில் போதிய வசதிகள் இருக்கவில்லை.
யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசன் துறைமுகத்தை அண்டியுள்ளது மயிலிட்டி. இங்கே காச நோய் வைத்தியசாலை அமைந்துள்ளது. நீண்டகாலக் கோரிக்கைகள், போராட்டங்களின் பின்னர் மயிலிட்டி துறைமுகமும் அதனைச் சுற்றியுள்ள சிறிய பகுதியும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விடுவிக்கப்பட்டது.
எனினும் காசநோய் வைத்தியசாலையும் அதனைச் சுற்றிய பகுதிகளும் விடுக்கப்படவில்லை. அது இராணுவத் தேவைகளுக்காகத் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
Post a Comment