கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு ஜனநாயக போராளிகள் கட்சியின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நினைவு கூரப்பட்டது.வங்க கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியில் அமைந்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜ.போ.கட்சியின் மகளீர் பிரிவினை சேர்ந்த ராதா தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தினர். இந்த நிகழ்வில் நினைவுரை நிகழ்த்திய தமிழ் அரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளர் ஜனமேஜந், தமிழ்தேசிய பாதையில் ஜனநாயக போராளிகள் கட்சியும் தங்களை இணைத்துக்கொண்டு தமிழ்தேசியக்கொள்கை நோக்கி பயணிக்கின்றார்கள் என்று தெரிவித்தார்.
Post a Comment