Ads (728x90)

 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட் டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க சிபிஐ அதிகாரிகள் தவறி விட்டதாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஓ.பி.ஷைனி கூறி இருந்தார்.

2ஜி முறைகேடு வழக்கில் சிறப்பு கோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சிபிஐ முடிவு செய்தது. இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி மத்திய சட்ட அமைச்சகத்திடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிறப்பு கோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மத்திய சட்ட அமைச்சகம் எழுத்துப் பூர்வமாக அனுமதி வழங்கி உள்ளது. இதனால் 2ஜி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் சிபிஐ விரைவில் மேல்முறையீடு செய்ய உள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget