Ads (728x90)

நேபாள இராணுவ தளபதி ஜெனரல் ராஜேந்திர செகேட்றி இன்று (21) காலை முல்லைத்தீவு கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு  பாதுகாப்பு படை தலைமையகத்துக்கு வருகை தந்துள்ளார்.

உலங்கு வானூர்தி மூலம் வருகை தந்த ஜெனரல் ராஜேந்திர செகேட்றியை முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு வரவேற்றார். அங்கு அவருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இந்த விஜயத்தின்போது பரஸ்பரம் இராணுவ தளபதிகளுக்கிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டதோடு இராணுவ கட்டமைப்புக்கள், செயற்பாடுகள் குறித்து கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றுள்ளன.

Post a Comment

Recent News

Recent Posts Widget