Ads (728x90)

பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய, "பத்மாவத்" படம் வருகிற 26ந் தேதி வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே நடித்த இந்தப் படம் தணிக்கை குழுவில் பெரும் போராட்டத்துக்கு பிறகு 26 கட்டுகளுடனும், யுஏ சான்றிதழுடனும் வெளிவர இருக்கிறது. தணிக்கை குழு படத்தின் பெயரையும் மாற்றியிருக்கிறது.

ஆனாலும் படத்துக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. "படத்தை வெளியிட தணிக்கை குழு அனுமதித்தாலும் எங்கள் மாநிலத்தில் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்" என்று ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா அறிவித்து விட்டார். பத்மாவத் படம் திரையிடப்படும் தியேட்டர்களை தீயிட்டு கொழுத்துவோம் என்ற கர்ன சேனா அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் படத்தை திரையிட மாட்டோம் என்று அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார். "பத்மாவத் படத்துக்கு எங்கள் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது. எங்களுக்கு படத்தை விட மக்களின் பாதுகாப்பே முக்கியமானது. எனவே குஜராத்தில் பத்மாவத் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்" என்று அறிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget