நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 3-வது சுற்றில் உலக சாம்பியனும், இந்திய வீரருமான விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார். இதன்மூலம் இந்தத் தொடரில் அவர் 2.5 புள்ளி களுடன் முன்னிலையில் இருக்கிறார்.நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் இந்த செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஆனந்த், அமெரிக்காவின் பேபியானோ கரவுனாவுடன் மோதி வெற்றி கண்டார். இதையடுத்து அவர் 2.5 புள்ளிகளைப் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இந்த சுற்றில் இந்திய வீரர் அதிபன், தோல்வி கண்டார். ரஷியாவின் கிராம்னிக் 1.5 புள்ளிகளைப் பெற்றுள்ளார்
Post a Comment