Ads (728x90)

சர்வதேச ஆயுதக் களைவு தொடர்பான மாநாட்டின் தலைமைத்துவம் நடப்பு ஆண்டில் முதற்றடவையாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஆயுதக் களைவு தொடர்பான மாநாடு ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த அமர்வின் ஆரம்பத்தில் அதன் தலைமைத்துவம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2007ஆம் ஆண்டிலேயே கடைசியாக இலங்கை இவ்வாறான நிகழ்வொன்றின் தலைமைத்துவத்தை வகித்திருந்தது.

இந்நிலையில், மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுக்குத் தலைமைவகித்து உரையாற்றிய ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, சர்வதேச ரீதியில் ஆயுதக் குழுக்கள் போன்றே அரச சார்பற்ற அமைப்புகளும் பயங்கரவாதத்தைப் போதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget