அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி சம்பியன் பட்டத்தை வென்றார்.அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 7–-6 (7–-2), 3–-6, 6–-4 என்ற செட் கணக்கில் சிமோனா ஹாலெப்பை (ருமேனியா) வீழ்த்தி முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை உச்சிமுகர்ந்தார்.
டென்மார்க் நாட்டவர் ஒருவர் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்றிருப்பது இதுவே முதன்முறையாகும்.இவ்வெற்றியின் மூலம் வோஸ்னியாக்கி, தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார்.
60 கோடி ரூபாவை பரிசுத்தொகையாக அள்ளிய 27 வயதான வோஸ்னியாக்கி கூறுகையில், ‘இந்த தருணத்துக்காகத் தான் பல ஆண்டுகளாக கனவு கண்டேன். அந்த கனவு இப்போது நனவாகி இருக்கிறது’ என்றார்.
இதேவேளை இரண்டாமிடத்தைப் பெற்ற சிமோனா ஹாலெப் 30 கோடி ரூபா பணப்பரிசை பெற்றுக்கொள்கிறார்.
Post a Comment