
திண்டுக்கல்லை சேர்ந்த சாதாரண பொறி வியாபாரியின் மகன் மகேஷ். அவரை தேடிக் கண்டுபிடித்து அங்காடி தெரு படத்தில் நடிக்க வைத்தார் வசந்தபாலன். சினிமா நடிகன் என்ற கனவோ, லட்சியமோ இல்லாத மகேசுக்கு அடித்தது பெரிய லக். அங்காடி தெரு வெற்றி பெற்றது. மகேஷின் நடிப்பு பேசப்பட்டது. ஆனால் தனக்கு கிடைத்த இந்த அபூர்வ இடத்தை தக்க வைக்கத் தவறி விட்டார் மகேஷ்.
சரியான வழிகாட்டுதல் இல்லாமல், சினிமா பற்றிய புரிதல் இல்லாமல் கிடைத்த இடத்தை தவறவிட்டார். அங்காடி தெருவுக்கு பிறகு அவர் நடித்த கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம், யாசகன், வேல்முருகன் போர்வெல், இரவும் பகலும் வரும், அழகு குட்டி செல்லம் போன்ற படங்கள் அவரது வளர்ச்சிக்கு உதவவில்லை.
இந்த நிலையில் தற்போது வீராபுரம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக அமிர்தா நடிக்கிறார். ஸ்ரீ வைசாலி மூவி மேக்கர்ஸ் சார்பில் குணசேகர் தயாரிக்கிறார், செல்வமணி ஒளிப்பதிவு செய்கிறார், ரித்தேஷ், ஸ்ரீதர் இசை அமைக்கிறார்கள். செந்தில்குமார் என்ற புதுமுகம் இயக்குகிறார். ஏவிஎம் ஸ்டூடியோவில் நேற்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. வீராபுரம் தன்னை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் மகேஷ்.
Post a Comment