மகிந்த ராஜபக்ச காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் 17 பெரும் நிதி மோசடிகள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்டஅரச தலைவர் ஆணைக்குழுவின் அறிக்கை இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.பெரும் நிதி மோசடிகள் தொடர்பிலான அரச தலைவர் விசாரணை ஆணைக்குழுவால் நீண்ட விசாரணைகளின் பின்னர் தயார்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படும் இந்த அறிக்கை ஆயிரத்து 200 பக்கங்களைக் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் 2010 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற லஞ்ச, ஊழல் முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டுள்ளது. அது போன்ற ஊழல் மோசடிகள் இடம்பெறாதிருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்த அறிக்கையில் முன்மொழிவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டன.
Post a Comment