Ads (728x90)

தொழில்நுட்ப கோளாறால் வானில் பறந்துகொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிர்ந்ததால் மத்திய ஆஸ்திரேலியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

எம்.எச்.122 என்ற அந்த மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் ஜன.18 ல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரை நோக்கி பறந்து கொண்டிருந்தது. அப்போது தொழில் நுட்ப கோளாறால் திடீரென விமானம் அதிர்ந்து, அதிக இரைச்சலையும் ஏற்படுத்தியது. இதனால் 224 பேர் பயணித்த அந்த விமானம் ஆஸ்திரேலியாவின் அலிஸ் ஸ்பிரிங்ஸ் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

அந்த விமானத்தில் பயணித்த பயணி சஞ்சீவ் பாண்டவ் கூறியதாவது:
"விமானம் ஆடியது, அதிர்வுற்றது மற்றும் இரைச்சல் அதிகமாகிக்கொண்டே இருந்தது. நான்கு மணிநேரத்திற்கு இதுபோன்ற பிரச்னையுடன் விமானம் பறந்தது. அப்போது பயணிகள் சிலர் பிரார்த்தனை செய்து கொண்டும், அழுது கொண்டும் இருந்தனர். அப்போது பயணிகளுக்கு விமான ஊழியர்கள் அவசர நடைமுறைகளை விளக்கினர், என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget