Ads (728x90)

அமெரிக்காவினால் இடைநிறுத்தப்பட்டுள்ள இலங்கைக்கான ஜி.எஸ்.பி வரிச்சலுகை மீண்டும் கிடைக்கும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் தயாசிறி தயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தடையானது, தனியாக இலங்கைக்கு மட்டும் விதிக்கப்படவில்லை. 120 நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது. 10.8 பில்லியன் டொலர் பெறுமதியான இலங்கையின் ஏற்றுமதியில், ஐரோப்பிய நாடுகளுக்கு 68 சதவீதமும், அமெரிக்காவுக்கு 27 சதவீதமும்  ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அமெரிக்காவுக்கு 2017 இல் 2.4 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த 31 ஆம் திகதியின் பின்னர், அந்த வரிச்சலுகையை நீடிக்க அமெரிக்க காங்கிரஸ் தீர்மானிக்கவில்லை.

Post a Comment

Recent News

Recent Posts Widget