Ads (728x90)

சமூ­க­வ­லைத் தளத்­தில் தேர்­தல் பரப்­புரை நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டார் என்று தேர்­தல்­கள் திணைக்­க­ளத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட முறைப்­பாட்­டுக்கு அமை­வாக, சம்­பந்­தப்­பட்ட கிராம அலு­வ­லர் பிர­தேச செய­ல­கத்துக்கு மீள அழைக்­கப்­பட்­டுள் ளதாக கிளி­நொச்சி மாவட்­டச் செய­லக வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் அர­சி­யல் கட்சி ஒன்­றுக்கு ஆத­ர­வாக கிராம அலு­வ­லர் சமூக வலைத் தளத்­தில் பரப்­புரை மேற்­கொண்­டார் என்று குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.

இது தொடர்­பில் கிளி­நொச்சி மாவட்­டத் தேர்­தல்­கள் திணைக்­க­ளத்­திற்கு முறைப்­பாடு கிடைக்­கப் பெற்­றதை அடுத்து இது தொடர்­பில் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

இதன் பின்­னர், சம்­பந்­தப்­பட்ட கிராம அலு­வ­லர் அவர் பணி­யி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்டு பிர­தேச செய­ல­கத்­திற்கு மீள அழைக்­கப்­பட்­டார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. இது தொடர்­பில் மேல­திக விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget