பிப்.,21ம் தேதி ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பிரவேசத்தை கமல் துவக்க உள்ளார்.பிப்.,21ம் தேதி கட்சியின் பெயரை அறிவிக்கும் கமல், அன்றிலிருந்து தனது அரசியல் சுற்றுப்பயணத்தை துவங்குவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வீட்டிலிருந்து தனது அரசியல் பிரவேசத்தை துவக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ‛கலாமுக்கு கனவுகள் பல இருந்தன. அவரைப் போலவே பல கனவுகளை கொண்டவன் நான். திராவிடம் என்பது தமிழ்நாடு தழுவியது மட்டுமல்ல; அது நாடு தழுவியது. விமர்சிப்பது மட்டுமே என் வேலையல்ல இறங்கி வேலை செய்ய வந்தவன் நான்' என தெரிவித்தார்.
மிகப் பெரிய சரித்திரமும், தொல்பொருள் ஆராய்ச்சியும் திராவிடத்தில் உள்ளது என்று மேலும் கமல் கூறினார்
Post a Comment