Ads (728x90)


சகல பாடசாலைகளிலும் தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரையிலான வகுப்பு மாணவர்ளுக்கு  மடி கணனிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரிய வசம் தெரிவித்துள்ளார்.  மடி கணனிகளை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் இரண்டு மாதங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உலகில் இன்று கல்வி நடவடிக்கைகள் தொழில்நுட்பமயப்படுத்தப்பட்டுள்ளன.

சர்தேச ரீதியில் அபிவிருத்தியடைந்த நாடுகள் பலவற்றில் ஆரம்ப கல்வி தொடக்கம் கல்வி நடவடிக்கைகள் தொழில்நுட்ப ரீதியிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இலங்கையிலும் கல்வி நடவடிக்கைகளை தொழில்நுட்ப ரீதியில் முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையின் கல்வி துறை முன்னைய காலங்களை விடவும் பாரிய முன்னேற்றங்களை அடைந்து வரும் நிலையில், அதனை மேலும் விருத்தி செய்யும் வகையிலான செயல் திட்டங்களை அரசாங்கம், கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வி அமைச்சு  என்பன இணைந்து முன்னெடுத்து வருகின்றன எனவும் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget